கார்ட்டூன்-4
ஜூலை 18, 2008 இல் 5:59 பிற்பகல் (அரசியல்)

ஜூலை 18, 2008 இல் 5:57 பிற்பகல் (சினிமா)
மார்க்கெட் போனாலும் சரியான டார்க்கெட் குறி வைத்தால் ஏகபோகமாக வாழலாம் என்பதற்குக் கவர்ச்சியாக பல ஹீரோக்களுக்கு, கைகொடுத்த அந்த நடிகைதான் சரியான உதாரணம்.
சில வருடங்களுக்கு முன்புவரை கவர்ச்சியில் `சங்கமித்த’ அந்த நடிகைக்கு வாய்ப்புகள் வற்றிப்போன நேரத்தில், நடிகையின் அழகில் தடுக்கி விழுந்தார் பிரபல ஹோட்டல் குரூப் உரிமையாளரின் வாரிசு. தடுக்கி விழுந்தவர் எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு நடிகையின் `சோப்பு போடும்’ படலமும் அரங்கேறியதாம். இதனால் நெருக்கம் அதிகமாகி இருவரும் கிறங்கித் திரிந்த நாட்கள் அதிகமானதாம்.
வெளிநாட்டில் உள்ள தங்களது ஹோட்டல்களின் நிர்வாகத்தைக் கவனிக்க மாதத்தில் பாதி நாட்கள் வெளிநாடுகளில் வட்டமடிக்கும் வாரிசு, ஒரு கட்டத்தில் தனது வெளிநாடு பயணங்களின்போது அந்நடிகையையும் தன்னோடு அழைத்துச் சென்று அசர வைக்க ஆரம்பித்திருக்கிறாராம். இதனால் நடிகையும் `தொட்டபெட்ட ரோட்டு மேல முட்டை பரோட்டா, நீ தொட்டுக்கொள்ள என்னை தரட்டா’ என்று தனது அன்பில் வாரிசை `நனைய’ வைத்துவிட்டாராம்.
இந்தக் காதல் சடுகுடுவின் பலனாக, சென்னை வேளச்சேரிக்கு அருகே பணக்குப்பம் என்ற ஏரியாவில் சுமார் இரண்டரை கோடி மதிப்பில் ஒரு மாபெரும் வசந்தமாளிகையை நடிகைக்கு பரிசாக வாரிசு கொடுத்திருக்கிறாராம்.
இந்த பத்திக்கிச்சு சமாச்சாரம் வாரிசு வீட்டில் அரசல்புரசலாக தெரிய வர, தற்போது வீட்டில் புயலைக் கிளப்பியிருக்கிறதாம். ஆனால் நடிகையோ கிடைத்தவரை லாபம் என்று மௌனம் காக்கிறாராம். வாரிசுதான் குடும்பமா அல்லது நடிகையா, என்ன செய்வது எனத் தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறாராம்..
ஜூலை 18, 2008 இல் 5:50 பிற்பகல் (சினிமா)
முதலில் நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் காதல் என்றார்கள். பிறகு, இல்லை இல்லை, விஷால்தான் நயன்தாராவின் லவ்வர் என்றார்கள். இப்போது விஷால்த்ரிஷாவுக்கு காதல் என்கிறார்கள்.
எதுதான் சார் உண்மை? என்று தலையைப் பிய்த்துக்கொண்டு திரிவது தமிழக மக்கள் மட்டுமல்ல; கோடம்பாக்கம் நட்சத்திரங்களும்தான்.
இந்தக் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க புலனாய்வுப் படையைக் களத்தில் இறக்கிவிட்டோம். கதை நாம் எதிர்பார்த்ததைவிட சுவாரஸ்யமாகவே போனது.
கோலிவுட்டில் புகுந்து விசாரித்தபோது பல தகவல்கள் விஷால்_த்ரிஷா காதலை உறுதிப்படுத்தவே செய்தன.
“நிஜமா சொல்லட்டுமா சார்… விஷாலும் த்ரிஷாவும்தான் ஒருத்தரை ஒருத்தர் சின்ஸியரா லவ் பண்றாங்க. விஷாலுக்கு நயன்தாராவுடன் இப்போதுதான் பழக்கம் உண்டாகி இருக்கு. ஆனா, த்ரிஷாவோட விஷாலுக்குப் பழக்கம் ஏற்பட்டு பல வருஷமாகிடுச்சு. தினமும் சாட், போன் வழியா பல மணிநேரம் பேசிக்கிறாங்க. எனக்குத் தெரிஞ்சு விஷால் பல கிஃப்ட்களை த்ரிஷாவுக்கு கொடுத்துக்கிட்டே இருக்கிறார். பதிலுக்கு அங்கிருந்தும் பல பரிசுப் பொருட்கள் விஷாலுக்கு வருது. ஸோ… இவங்க ரெண்டு பேரும் காதலிக்கிறது உறுதி” என்றார் அந்த கோலிவுட் வி.ஐ.பி.
“கோலிவுட்டைப் பொறுத்தவரை இந்த மாதிரி கிசுகிசு கிளம்பறது புதுசில்லை. ஆனால் இதை வெறும் கிசுகிசுதானேன்னு சும்மாவும் விட்டுவிட முடியாது. நெருப்பில்லாமல் புகையாது இல்ல. த்ரிஷா-விஷால் காதலைப் பற்றி விஜய்க்கு தெரியவர, உடனே `குருவி’யில் இருந்து த்ரிஷாவை கழற்றி விட்டுடும்படி கட்டளை பறந்திருக்கு. ஆனா த்ரிஷா `இது என்னோட கௌரவப் பிரச்னை’ என்று நியாயம் கேட்க, மீண்டும் வாய்ப்பு கைவசமானது.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு நடிகைக்கும் ஒரு நடிகருக்கும் இடையே காதல், அது, இதுன்னு இருந்தால் மற்ற நடிகர்கள் அந்த நடிகையை தங்கள் படங்களுக்கு ஒப்பந்தம் செய்வதில்லை என்பது உங்களுக்கே தெரிஞ்சதுதானே” என்றது இன்னொரு ஆதாரபூர்வமான தகவல் வட்டாரம்.
“விஷால் வீட்ல இருக்குறவங்களுக்கு த்ரிஷாவை மனதளவில் ரொம்பவே பிடிச்சிருச்சு. த்ரிஷாவைப் பொறுத்த அளவில் எந்த விஷயத்தையும் வெளிப்படையா செய்யுற கேரக்டர். தன்னோடு நடிக்கும் எல்லா நடிகர்களோடும் நல்ல விதமான ஃப்ரெண்ட்ஷிப்பை வைத்துக்கொள்வார். சிம்புகூட த்ரிஷாவோட போன் பண்ணி மணிக்கணக்கா பேசுறார். இந்தத் தகவலை வைத்து வதந்தியை கிளப்பிவிட்டால் என்ன சார் பண்ணமுடியும்?” என்று ஆதங்கம் பொங்கக் கேட்டது இந்தத் தகவல் வட்டம்.
“த்ரிஷாவிற்கு சென்னைதான் சொந்த ஊர். சினிமா தவிர, மற்ற ஃப்ரெண்ட்ஸுகளும், உறவினர்களும் நிறையப்பேர் இருக்காங்க. அவர்களோடு எங்காவது பார்ட்டி, மீட்டிங் என்று போனால் கூட அதை நியூஸாக்கி விடுகிறார்கள். ஒரு நடிகைனா சினிமாவைத் தவிர தனிப்பட்ட ஆசைகள் இருக்கக்கூடாதா? வேறு எங்கும் போகக் கூடாதா? எப்படித்தான் வாழ்றது? ஷூட்டிங் முடித்து வந்து வீட்டிற்குள்ளேயே தான் அடைந்து கிடக்கணுமா? என்ன சார் இது! எதற்கெடுத்தாலும் த்ரிஷாவால் தான் பிரச்னைனு சொன்னா எப்படி? இங்கு யாருக்கும் மனசாட்சியே கிடையாதா? ஃப்ரெண்ட்ஸுகளிடம் மட்டும்தான் கலகலப்பாக இருப்பாரே தவிர, மற்றபடி சினிமா ஃப்ரெண்ட்ஸுகளுடன் அவ்வளவாக கலகலப்பாக இருக்க மாட்டார். அவர் பிரச்னைக்குரிய பெண் கிடையாது. சமூக சேவை, ஆதரவற்ற, புற்று நோயால் பாதித்த குழந்தைகளுக்கு அன்பு காட்டும் ஒரு நடிகைதான் த்ரிஷா. அதோட அவங்க அம்மா நல்லவிதமாகத் தான் வளர்த்திருக்காங்க” என்று நற்சான்றிதழ் கொடுக்கிறது த்ரிஷாவின் உறவு வட்டாரம்.
கூடவே “விஷாலும், த்ரிஷாவும் காதலிப்பதாக இப்போ பேச ஆரம்பிச்சிருக்காங்க. சார், த்ரிஷா கல்யாணமாகாத ஒரு பொண்ணு. விஷால் கல்யாணமாகாத ஒரு பையன். இருவரும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டால் என்ன தவறு? காதல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது சந்தோஷமான விஷயம்தானே” என்றும் நியாயம் கேட்கிறது.
த்ரிஷா அம்மா உமா கிருஷ்ணனிடம் இதுபற்றிக் கேட்டபோது:
“சாரி. இதுபற்றி நான் எதுவுமே பேசமாட்டேன். எதுக்குப் பேசணும். த்ரிஷாவைப் பொறுத்தவரை நல்லது எது? கெட்டது எது? என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். அவர் லிமிட் அவருக்குத் தெரியும். தவிர எந்த ஒரு விஷயத்தையும் இதுவரை அவர் என்னிடம் மறைத்ததே இல்லை. `புஜிகாடு’ தெலுங்குப் படத்திற்காக நியூசிலாந்து போய்விட்டு, அப்படியே அங்கிருந்து ஐதராபாத் போய்விட்டார். இன்னும் இரண்டு வருஷங்களுக்குத் தொடர்ந்து பட வாய்ப்புகள் கைவசம் இருக்கு. காதல், கத்தரிக்காய் என்று `புத்திகெட்ட’ தனமாகப் பேசிக்கிட்டு இருப்பதைக் கேட்க சிரிப்புதான் வருது. த்ரிஷாவிற்கு காதலிப்பதற்கெல்லாம் நோ டயம்” என்றார்..
ஜூலை 18, 2008 இல் 5:45 பிற்பகல் (சினிமா)
உலகநாயகனின் மகள் மேடியுடன் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அதற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்புத் தெரிவித்தஉலகநாயகன், மேடியிடமே போனில்பேசி அப்படத்தை ட்ராப் செய்ய வைத்தாராம். இப்போது ஹிந்தியில் அமீருடன் நடிக்க முயலும் தன் மகளை எப்படித் தடுப்பது என்பது புரியாமல் தவிக்கிறாராம்.
ஜூலை 18, 2008 இல் 4:24 பிற்பகல் (சினிமா)
தமிழ், மலையாளத் திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வந்த கெர்லி என்கிற கோபிகாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த - அயர்லாந்தில் டாக்டராகப் பணியாற்றி வரும் அஜிலேஷுக்கும் எர்ணாகுளத்தில் திருமணம் நடந்தேறியது.
எர்ணாகுளம் அருகே உள்ள கொத்தமங்கலம், புனித மேரீஸ் சர்ச்சில் இந்தக் கல்யாணம் கோலாகலமாக நடந்தது.
தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கோபிகா.தமிழில் அவருக்கு முதல் படம் ஆட்டோகிராப். அதைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்தார். கடைசி வரை ஓவர் கிளாமர் காட்டாமலேயே நடித்து முடித்த சாதனைக்குரியவர் கோபிகா. தமிழில் அவர் நடித்த கடைசிப் படம் வெள்ளித்திரை.
அவருக்கும் அயர்லாந்தில் டாக்டராகப் பணியாற்றி வரும் கேரளாவைச் ேசர்ந்த அஜிலேஷுக்கும் திருமணம் நிச்சயமானது. நேற்று இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தேறியது.
திரையுலகப் புள்ளிகள், மலையாள நடிகர், நடிகைகள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
கொத்தமங்கலம் செயின்ட் ஜார்ஜ் கதீட்ரலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல எர்ணாகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை மலையாளத் திரையுலகப் புள்ளிகளுக்காக இன்னொரு வரவேற்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு கோபிகா குடும்பத்தினர் ஏற்பாடு செய்யவில்லை.
ஜூலை 18, 2008 இல் 3:07 பிற்பகல் (அரசியல்)
சோம்நாத் சாட்டர்ஜி லோக்சபா சபாநாயகரா அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பியா என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், லோக்சபா செயலக பொதுச் செயலாளரிடம் வினா எழுப்பியுள்ளார்.
லோக்சபாவில் நடக்கப் போகும் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக சோம்நாத் சாட்டர்ஜியின் தலை படு வேகமாக உருட்டப்பட்டு வருகிறது. அரசுக்கு எதிராக அவர் வாக்களிக்க வேண்டும், பதவியிலிருந்து விலக வேண்டும் என இடதுசாரிகள் கோரி வருகின்றன. ஆனால் சோம்நாத் பதவி விலகத் தேவையில்லை என்று காங்கிரஸ் கூறி வருகிறது.
இதுகுறித்து சோம்நாத் சாட்டர்ஜியோ, 22ம்தேதி வரை பொருத்திருங்கள் என்று மர்மமாக கூறி வருகிறார்.
இந்த நிலையில் சோம்நாத் சாட்டர்ஜியின் அந்தஸ்து என்ன என்று லோக்சபா செயலக பொதுச்செயலாளருக்கு குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் சபாநாயகரா அல்லது சிபிஎம் எம்.பியா என்று பிரதீபா பாட்டீல் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கும் வகையில், இடதுசாரிகள் அஏளித்த கடிதத்தில், சோம்நாத் சாட்டர்ஜியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்தே சோம்நாத்தின் நிலை என்ன என்று லோக்சபா செயலாளரிடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டுள்ளார்.
இதையடுத்து சபாநாயகர் அலுவலகமே சோம்நாத் குறித்து விளக்கம் தெரிவித்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பதில் அனுப்பியுள்ளது. அதில், சோம்நாத் சாட்டர்ஜி இன்னும் சபாநாயகர் பதவியில் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 18, 2008 இல் 3:06 பிற்பகல் (சினிமா)
மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது என்ற பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, ‘காமெடி கிங்’ ரொம்பவே பொருந்தும்.
பொங்கலுக்கு வெளியாகி ஒரளவு லாபமும் சம்பாதித்துக் கொடுத்த தங்கம் படத்துக்குப் பின் கவுண்டமணியின் காமெடிக்கு ஏக மவுசு. காரணம் அந்தப் படம் ஓடியதே அவரது காமெடிக்காகத்தான்.
அதன்பிறகு வந்த 20க்கும் மேற்பட்ட வாய்ப்புகளை வேண்டாம் என்று கூறிவிட்ட கவுண்டமணி, இப்போது தேரந்தெடுத்து 6 படங்களை மட்டும் ஒப்புக் கொண்டுள்ளார். குசேலன் வாய்ப்பையே வேண்டாம் என்று கூறி அதிர வைத்தவர் கவுண்டமணி.
ஆனால் சரத்குமார் நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் ஜக்குபாயில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இது தவிர ராஜ்கிரணுடன் இரு படங்கள், சத்யராஜூடன் இரு படங்களில் நடிக்கிறார்.
ரவிக்குமாருடன் கவுண்டமணி இணைந்த நாட்டாமை, சமுத்திரம், சேரன் பாண்டியன் போன்றவை வசூலில் பெரும் சாதனைப் படைத்தன.
ஜக்குபாயில் கிட்டத்தட்ட சரத்துக்கு இணையான வேடத்தில் நடிக்கிறார் மணிர். இந்தப் படத்தில் கவுண்டமணியுடன் செந்திலையும் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் ரவிக்குமார்
ஜூலை 18, 2008 இல் 3:05 பிற்பகல் (பொது)
சிவகங்கை மாவட்டம் திருவாடானையில் நடந்த ஆடி திருவிழாவில் எருமை ரத்தத்தைக் குடித்து குழந்தைகள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவாடானையில் உள்ள சமத்துவபுரம் அருகே நரிக் குறவர்கள் காலனி உள்ளது. இங்கு 36 குடும்பங்களை சேர்ந்த நரிக்குறவர்கள் ஊசி, பாசி விற்பனை செய்து வசித்து வருகிறார்கள். இவர்கள் பத்திரகாளியம்மன், மீனாட்சி அம்மன், அய்யனார், பாண்டி உள்ளிட்ட குலதெய்வங்களை வழிபட்டு வருகிறார்கள்.
இதில் அருளாந்து என்பவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் தலைமுறை, தலைமுறையாக பத்திரகாளி அம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இவர்கள் ஆண்டுதோறும் ஆடிமாதம் ஆடித் திருவிழா கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக காரைக்குடியில் இருந்து பத்திரகாளியம்மன் உருவ வெள்ளி சிலையை செய்து நேற்று முன்தினம் ஊர்வலமாக திருவாடானைக்கு எடுத்து வந்தனர். உடன் நேர்த்திக்கடன் செலுத்த 2 எருமை மாடுகளையும் அலங்கரித்து அழைத்து வந்தனர்.
இதைதொடர்ந்து நேற்று முன் தினம் ஆடி மாத பிறப்பையொட்டி அதிகாலை 4 மணிக்கு பத்திரகாளியம்மனுக்கு 2 எருமை மாடுகளை பலி கொடுத்தனர். அப்போது எருமை மாட்டில் இருந்து பீறிட்டு வெளியேறிய ரத்தத்தால் சாமி சிலைக்கு அபிஷேகம் செய்து அருளாந்து குடும்பத்தை சேர்ந்த முத்தையா, ஆரோக்கியம், இருதயம், பாக்கியராஜ், மைகேல் ஆகியோர் ரத்தத்தை குடித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களது குழந்தைகள் குமரேசன், அன்புராசா, கணேஷ், விக்ரம், விஜயன் ஆகியோரும் ரத்தம் குடித்தனர்.
இதுகுறித்து அருளாந்து கூறியதாவது:
பத்திரகாளி அம்மன் உருவ வெள்ளி சாமி சிலைதான் எங்களின் குடும்பச் சொத்து. 24 தலைமுறையாக ஆண்டுதோறும் ஆடி மாத பூஜை வழிபாடு நடத்துகிறோம். அப்போது குடும்ப நன்மைக்காகவும், உடல் ஆரோக்கியத்துக்காகவும் எருமை மாடுகளை பலிகொடுத்து ரத்தம் குடிப்போம்.
சாமி பக்தி உள்ளதால் ரத்தம் செரிமாணம் ஆகிவிடும். இதன் கறியை பத்ரகாளியம்மன் சாமி கும்பிடுபவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். திருவிழாவின் மறுநாள் மது எடுப்பு நடக்கும். இதில் மாட்டின் தலை, கொம்பை ஊர்வலமாக எடுத்து சென்று ஒரு புதரில் வைத்து சாமி கும்பிட்டு திருவிழாவை நிறைவு செய்வோம் என்றார்.
ஜூலை 18, 2008 இல் 3:04 பிற்பகல் (அரசியல்)
சமாஜ்வாடி கட்சி இன்று கூட்டிய முக்கிய கூட்டத்திற்கு 39 எம்.பிக்ளில், 16 பேரே வந்தனர். இதனால் கட்சி உடையும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் காங்கிரஸும், சமாஜ்வாடியும் பெரும் பீதியடைந்துள்ளன.
ஜூலை 22ம் தேதி லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்படவுள்ள நிலையில் சமாஜ்வாடி கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் இன்று டெல்லியில் கூட்டப்பட்டது. இக்கூட்டத்திற்கு கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தலைமை வகித்தார். அமர்சிங்கும் உடன் இருந்தார்.
இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மொத்தம் உள்ள 39 எம்.பிக்களில் வெறும் 16 பேரே வந்திருந்தனர்.
39 பேரில் அதீக் அகமது, அப்சல் அன்சாரி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராஜ் பாபரும், பேனி பிரசாத் வர்மாவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முனவர் உசேன் அதிருப்தி எம்.பி ஆவார். அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஏற்கனவே அவர் டிக்ளேர் செய்து விட்டார். அதேபோலத்தான் ராஜ்நாராயணன் புதோலியா, ஜெய் பிரகாஷ் ஆகியோரும் அறிவித்துள்ளனர்.
கீர்த்தி வர்தன் சிங், மோகன் சிங், ரேவதி ரமன் சிங் ஆகியோர் கடந்த கூட்டத்திற்கு வராமல் இருந்தனர். ஆனால் இப்போதைய கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் வெறும் 16 பேரே வந்துள்ளால் சமாஜ்வாடி கட்சி உடைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
இந்தச் சூழ்நிலையில், ஜூலை 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் நடைபெறும் நம்பிக்கை வாக்கு தொடர்பான கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கட்சி எம்.பிக்களுக்கு சமாஜ்வாடி கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜூலை 18, 2008 இல் 11:51 நான் (சினிமா)
நல்ல திறமைசாலிகள்தான் எப்போதும் சிக்கலுக்குள்ளாகிறார்கள், அல்லது சிக்கலை ஏற்படுத்துகிறார்கள்.
நம்ம வைகைப் புயல் வடிவேலுவையே எடுத்துக்கொள்ளுங்கள். கவுண்டமணிக்குப் பிறகு தனிப் பெரும் காமெடியன் என்ற அந்தஸ்தை அரும்பாடுபட்டுப் பெற்றார். இன்று அவரது முகம் திரையில் தெரிந்தாலே அரங்கம் சிரிப்பலையில் அதிர்கிறது.
இந்திரலோகத்தில் அழகப்பன் படத்தின் தோல்விக்குப் பிறகும்கூட, அவரை நாயகனாக நடிக்க வைக்க எத்தனையோ தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர்.
அப்படிக் காத்திருந்த பெரும்புள்ளிகளில் ஒருவர் அபிராமி ராமநாதன். பஞ்சாமிர்தம் படத்தைத் துவங்கும் வடிவேலுவுக்காக ஒரு நகைச்சுவைக் கதையைத் தயார் செய்து, இயக்குநரை விட்டு அவருக்கு கதையும் சொல்ல வைத்தார். ஆனால் வடிவேலு நடிக்க மறுத்துவிட்டார். காரணம் வடிவேலு சொன்ன மாற்றங்களைச் செய்ய இயக்குநர் மறுத்துவிட்டதுதான்.
இப்படி வடிவேலு கழற்றிவிட்ட படங்கள் நிறைய… இது கூடப் பரவாயில்லை. ஆனால் வடிவேலு தன் பிடிவாதத்தால் நடிக்க ஒப்புக் கொண்டு பாதியில் கழன்று கொண்ட படங்கள் அவர் நடித்துள்ள படங்களின் பட்டியலுக்குச் சம்மானது.
இரண்டு படத்தில் இயக்குநர் சுந்தர் சி சொன்னதுபோல் நடிக்காமல் தன்னிஷ்டப்படி நடித்ததால் அவருடைய நட்பையும் இழக்க வேண்டிய வந்த்து. இனி சுந்தர் படங்களில் நடிக்கவே மாட்டேன் என வைராக்கியத்துடன் இருக்கிறார் வைகைப் புயல்.
சுந்தரின் சீடரான சுராஜூடனும் இப்போது வடிவேலுவுக்குப் பிரச்சினை.
தனுஷ்- தமன்னா நடிக்கும் படிக்காதவன் படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பில், ஒரு காட்சியில் இயக்குநர் சொன்னதை தன் இஷ்டப்படி நடித்துள்ளார் வடிவேலு. இயக்குநர் மூன்று முறை சொல்லியும் கேட்காமல் தன் விருப்பப்படியே நடித்துள்ளார்.
நான்காவது முறை இயக்குநர் அதைச் சுட்டிக் காட்டியபோது, கோபித்துக் கொண்டு செட்டை விட்டே போய்விட்டார் வடிவேலு.
நடந்ததை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த படத்தின் ஹீரோ தனுஷ், விடுங்க… நாளைக்குப் பாத்துக்கலாம், என்று கூறிவிட்டாராம்.
ஆனால் இயக்குநருக்கு அடுத்த நாளே அதிர்ச்சி காத்திருந்தது. வாங்கின அட்வான்ஸை பைசா பாக்கியில்லாமல் கொடுத்தனுப்பிவிட்டாராம் வடிவேலு.
நஷ்டம் யாருக்கு? நல்ல நகைச்சுவைக்குக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு!